இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மட்டுமின்றி அதற்கு முன்பும் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நியூஸ் 18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் ஐநா அதிகாரியின் விமர்சனத்திற்கு இவ்வாறு பதில் அளித்தார் ராஜ்நாத் சிங்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளர். முன்னதாக இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி, ஐநா பொதுசெயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது தேர்தல் காலங்களில் ஒவ்வொரு குடிமக்களின் உரிமைகள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரமாக மற்றும் நேர்மையான முறையில் அனைவரும் வாக்களிக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நெட்வொர்க் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷி பிரத்யேக நேர்காணலின்போது ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜ்நாத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
இந்தியாவில் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை அமைப்புகள் இயங்குகின்றனர். அவர்களது விசாரணையில் யார் குற்றம் செய்ததாக ஆதாரங்கள் இருக்கிறதோ அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் விசாரணை அமைப்புகள் மீது மத்திய அரசு எந்தவொரு அழுத்தமும் கொடுப்பது இல்லை.
ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறியதை முற்றிலும் நிராகரிக்கிறேன். இந்தியாவில் 2019, 2014 ஆம் ஆண்டுகளில் மட்டுமின்றி அதற்கு முன்பு நடந்த தேர்தல்களும் சுதந்திரமாக நேர்மையான முறையில் நடத்தப்பட்டன. என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
