Last Updated:
டிரம்ப் அமெரிக்க மத்திய கல்வித்துறையை கலைக்க உத்தரவிட்டார். இதனால் கல்வி உரிமைகள் மாகாணங்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தியாவில் இதற்காக போராடி வருகின்றன.
இந்தியாவில் கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் அதை அமல்படுத்தியுள்ளார்.
அமெரிக்க மத்திய கல்வித்துறையை கலைப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க கல்வித்துறையின் கீழ் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 34 ஆயிரம் தனியார் பள்ளிகளும் இயங்கி வந்தன.
இந்த நிலையில், முதல் முறையாக பதவியேற்றதும் மத்திய கல்வித்துறையை கலைக்க டிரம்ப் முயற்சித்தார். அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபரான டிரம்ப், கல்வித் துறையில் தேவையற்ற செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
அண்மையில், மத்திய கல்வித்துறையில் இருந்த ஆயிரத்து 300 பேரை டிரம்ப் பணி நீக்கம் செய்து ஆணையிட்டார். இந்த சூழலில், பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்த டிரம்ப், கல்வித்துறையை கலைப்பதற்கான ஆணையில் கையொப்பம் இட்டார்.
கல்வித்துறையை கலைப்பதன் மூலம், இனி கல்விக்கான அனைத்து உரிமைகளும் அமெரிக்க மாகாணங்களுக்கே அளிக்கப்படும். கல்வித்துறை கலைக்கப்பட்டது குறித்து பேசிய டிரம்ப், “அதிக நிதி செலவிட்டும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சரளமாக படிக்கவும், கணிதமும் தெரியவில்லை” என்றும் வேதனையை வெளிப்படுத்தினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 21, 2025 7:08 AM IST
மத்திய கல்வித்துறையை கலைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. இனி மாகாணங்களுக்கே அனைத்து உரிமையும்!


