இந்தியாவில் கேமிங் துறையை நெறிப்படுத்துவதற்கு ஆணையம் தேவையில்லை என்று கூறிய பிரதமர் மோடி, தேவைப்பட்டால் அரசு தலையிடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நாட்டின் தலைசிறந்த ஆன்லைன் வீடியோ கேமர்கள் 7 பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ஆன்லைன் கேமிங் மற்றும் கேமர்கள் குறித்து பல்வேறு தகவல்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். கேமிங் துறையை அரசு நெறிப்படுத்துமா என்று கேமர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதற்கான தேவையில்லை என்று பிரதமர் பதில் அளித்தார். மேலும், அதற்கான தேவை இருந்தால், அரசு தலையிடும் என்றும் விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, கேமர் ஒருவர் மோடியின் வயது குறித்து பேசிய போது, தானும் அவர்கள் தலைமுறையை சேர்ந்தவர்தான் என நகைச்சுவையாக பதில் அளித்தார். மேலும் மொபைல் கேம், விர்சுவல் கேம் என பல்வேறு கேம்களை பிரதமர் மோடி விளையாடி மகிழ்ந்தார்.
இந்த ஆன்லைன் வீடியோ கேமிற்கு தான் அடிமையாகக் கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உலக அளவிலான கால நிலை மாற்றம் பிரச்னைக்கு வீடியோ கேமர்கள் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)