இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் பதவிகளில் பெண்கள் வெறும் 15 சதவீதம் அளவிலேயே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பு தகவல் நிறுவனங்களான LINKEDIN மற்றும் QUANTUM HUB இணைந்து WOMEN IN LEADERSHIP IN CORPORATE INDIA என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு ஆரம்பநிலை பதவிகளை விட குறைவாக இருப்பதாக கூறியுள்ளது.
அதன்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆரம்ப நிலை பதவிகளில், பெண்கள் 28.7 விழுக்காடு அளவிற்கு பணியாற்றுவதாகவும்,
சீனியர் அடிப்படையில் 29.5 விழுக்காடு பெண்களும்,
மேலாளர் நிலை பதவிகளில் 18 புள்ளி ஐந்து விழுக்காடு பெண்களும் பணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவன இயக்குநர்களை பொருத்தமட்டில், 20.1 சதவீத பெண்கள் தங்களது பங்களிப்பை வழங்குவதாகவும், துணைத்தலைவர்கள் பொறுப்பில் 17.4 சதவீத பெண்கள் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை தடை செய்யக் கோரி வழக்கு
கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் பதவியான தலைமை செயல் அதிகாரி பொறுப்பில், 15.3 விழுக்காடு பெண்களே இந்தியாவில் இருப்பதாகவும் LINKEDIN ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
