யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செ.திருச்செல்வம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது ஐந்தாவது உலக சாதனையை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந்தியாவின் தமிழ்நாட்டு சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி உலக சாதனை நிகழ்வில் உலக சாதனையாளர் திருச்செல்வம் 1700 கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தாடியின் பலத்தால் 510 மீற்றர் தூரம் இழுத்து தனது ஐந்தாவது உலக சாதனையை படைத்துள்ளார். உலக சாதனையாளர் திருச்செல்வம் இதற்கு முன்னர் தாடி, தலைமுடி மற்றும் கழுத்து ஆகியவற்றின் பலம் கொண்டு கனரக வாகனங்களை இழுத்து நான்கு முறை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி விசேட நிருபர்

&w=1200&resize=1200,675&ssl=1)