Last Updated:
சோலார் பேருந்து பணிமனை என்பது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை அன்று (ஜூலை 2ம் தேதி) இந்தியாவின் முதல் சோலார் மூலமாக இயங்கும் ஸ்மார்ட் பஸ் ஸ்டேஷன் சூரத்தில் திறந்து வைக்கப்பட்டது. சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதுவிதமான எலக்ட்ரிக் பேருந்து நிலையம் என்பது 1.60 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்ந்த தொழில்நுட்ப வசதியில் 100 kW அளவிலான ரூஃப் டாப் சோலார் பவர் பிளான்ட் மற்றும் 224 kWh அளவிலான பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி டெவலப்மெண்ட் ஏஜென்சி GIZ உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேஷனில் 24/7 மணி நேரமும் சோலார் ஆற்றல் மற்றும் மறு பயன்பாட்டு செகண்ட் ஹேண்ட் பேட்டரிகள் மூலமாக சார்ஜிங் ஆதரவு கிடைக்கிறது. கூடுதலாக இந்த பஸ் நிலையத்தில் இலவச வைஃபை, பேருந்துகளுக்கான லைட்டிங் மற்றும் சார்ஜிங் பாயிண்டுகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.

லைட் அண்ட் எனர்ஜி எஃபிசியன்சி செல் ஆஃப் SMC-ன் நிர்வாக இன்ஜினியரான பிரகாஷ் பாண்டியா அவர்கள் இது குறித்து பேசியபோது, பகல் நேரத்தில் சோலார் பவர் ஆலை ஆனது ஆற்றலை சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும் என்றும், அதனை பேட்டரிகளில் சேமித்து வைப்பதன் மூலமாக இரவு நேரத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளை சார்ஜ் செய்ய பயன்படுத்துவதாகவும் கூறினார். இது உள்ளூர் மின்சார வலை மீதான அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொது போக்குவரத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் ஒரு யோசனையை நோக்கிய அணுகுமுறையாக அமைகிறது.

மதிப்பீடுகளின்படி, இந்த சோலார் பேருந்து பணிமனை என்பது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தோராயமாக 6.65 லட்சம் ரூபாய் ஆற்றல் உற்பத்தி செலவு சேமிக்கப்படும். அதைவிட முக்கியமாக இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய ஆற்றல் இலக்குகளை அடையவும் மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு முக்கியமான படியாகவும் இது அமைகிறது.
முன்னணி தொழில்நுட்பம் மற்றும் அதே சமயத்தில் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றையும் இணைத்து இந்த ப்ராஜெக்ட் உருவாக்கப்பட்டிருப்பதாக பாண்டியா கூறினார். இதில் பேட்டரிகளை மறு உபயோகப்படுத்துதல் மற்றும் தூய்மை ஆற்றல் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பது ஒரு மிகப்பெரிய தரக்குறியாக அமைகிறது. “இது வெறும் ஒரு கட்டமைப்பு சார்ந்தது மட்டும் இல்லை. பொது போக்குவரத்தை பசுமையாகவும், பயனுள்ளதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ப தயாராக வைப்பதற்கான நீண்ட கால முயற்சி இது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
July 04, 2025 8:10 PM IST
இந்தியாவில் இலவச WiFi, சார்ஜிங் வசதிகளுடன் சோலார் ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட்…! எங்கே இருக்கு தெரியுமா…?