இது குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 30, 2026 முதல் காகித நாணயத் தாள்களைத் திரும்பப் பெற்று, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நாணயத் தாள்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. RBI-இன் தகவலின்படி, ஜூன் 30, 2026-க்குள் காகித நாணயத் தாள்களைத் திரும்பப் பெறுவதற்கோ அல்லது அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நாணயத் தாள்களைக் கொண்டுவருவதற்கோ எந்தத் திட்டமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

