UPI அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது, பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமின்றி, ஸ்மார்ட்போன் மூலம் விரைவாகவும், வசதியாகவும் டிரான்சாக்ஷன்களை செய்ய முடிகிறது. இருப்பினும், UPI-இன் இந்த வளர்ச்சிக்கு ஒரு சில பின்னடைவுகளும் உள்ளன. பல பயனர்கள் மோசடி செய்பவர்களிடம் சிக்கி, தாங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இழந்து வருகின்றனர். பொதுவான UPI மோசடிகள் தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இதன் மூலமாக மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்கிற்கு ஒரு சிறிய தொகையை அனுப்பி, பின்னர் உங்களை தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கூறுவார்கள். அவர்கள் பெற்றதைவிட அதிக தொகையை “திருப்பித் தருமாறு” கேட்பார்கள். மருத்துவ அவசரம் போன்ற காரணங்களைக் கூறி, ஒரு அவசர சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள்.
இந்த முறையில், மோசடிக்காரர்கள் UPI பரிமாற்றத்திற்கு ஈடாகப் பணம் தருவதாகக் கூறுவார்கள். நீங்கள் பணத்தை மாற்றியதும், அவர்கள் பணத்தைத் தராமல் மாயமாகிவிடுவார்கள் அல்லது கள்ள நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள்.
போலியான SMS, வாட்ஸ்அப் செய்திகள் அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளுடன் கூடிய இமெயில்களை அனுப்புவது மற்றொரு பொதுவான தந்திரமாகும். இந்த லிங்குகளை கிளிக் செய்தால், அது உங்களின் UPI விவரங்கள், PIN அல்லது OTP ஆகியவற்றைப் பதிவுசெய்யும் ஒரு போலி UPI அப்ளிகேஷனுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
ஆன்லைன் மோசடி செய்பவர்கள், கடன் வழங்குநர்களின் முறையான பிளாட்ஃபார்ம்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி UPI அப்ளிகேஷன்கள் அல்லது QR குறியீடுகளை உருவாக்குகிறார்கள். இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வது அல்லது தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்வது, உங்கள் வங்கிக் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு வழிவகுக்கும். பல சமயங்களில், பணத்தைப் பெறுவதற்காக QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்கின்றனர். ஆனால், அப்படி நீங்கள் க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்துவிட்டால் உங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் எடுத்து விடுவார்கள்.
வங்கி அதிகாரிகள் அல்லது காவல்துறை போன்ற நம்பகமான நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, UPI மூலம் அவசரப் பணம் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கோருவார்கள். ஒரு சிக்கலைத் தீர்க்க அல்லது நிலுவையில் உள்ள கட்டணத்தைச் நீங்கள் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள். UPI மோசடிகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம்.
பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே உங்கள் UPI PIN தேவை, பணத்தை பெறுவதற்குத் தேவையில்லை. வங்கி அதிகாரிகள் அல்லது வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் உட்பட யாரிடமும் இதைப் பகிர வேண்டாம்.
சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது.
புகழ்பெற்ற UPI பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தவும், அவற்றை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும். தேர்ட் பார்ட்டி மூலங்களிலிருந்து அப்ளிகேஷன்கள் டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.
வங்கிகள் ஒருபோதும் முக்கியமான தகவல்களைக் கேட்காது. Truecaller போன்ற செயலிகளைப் பயன்படுத்தி தெரியாத எண்களை சரிபார்க்கவும்.
மோசடி செய்பவர்கள் “பணம் கோரும்” அம்சத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பணத்தைப் பெறுவதற்கு PIN நம்பர் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். டிஜிட்டல் டிரான்சாக்ஷன்கள் அதிகரித்து வருவதால், UPI மோசடி அபாயங்களும் அதிகரிக்கின்றன. ஃபிஷிங், மால்வேர் மற்றும் சிம் குளோனிங் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றுகின்றனர்.
எனவே, பயனர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். உங்கள் PIN நம்பரை பாதுகாத்தல், பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் கணக்குச் செயல்பாட்டைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளியுங்கள். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான டிரான்சாக்ஷன்களையும் உடனடியாக புகாரளிப்பதன் மூலம் உங்கள் பணத்தை பாதுகாக்கலாம்.
August 06, 2025 10:17 AM IST
இந்தியாவில் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடிகள்… கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எப்படி பாதுகாப்பது…?

