• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 03, 2026 3:55 PM IST

Center of excellence என்கின்ற வகையில் விளையாட்டு மருத்துவத்திற்கு என்று மருத்துவக்கட்டமைப்பு தமிழ்நாடு துணை முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விளையாட்டு மருத்துவத்திற்கு என்ற மருத்துவக்கட்டமைப்பை தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டு மருத்துவத்திற்கு என்ற மருத்துவக்கட்டமைப்பை தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 9 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (03.03.2026) விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில் சிறப்பு உயர்திறன் மையம் (Centre of Excellence) திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

“ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், இந்த பன்னோக்கு மருத்துவமனை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தந்துள்ளார்கள்.

விளையாட்டு மருத்துவத்திற்கு என்ற மருத்துவக்கட்டமைப்பை தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் முதன் முறையாக இங்கு ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் கருவுற்ற ஓரிரு வாரங்களில் மரபணு தன்மையை கண்டறியும் Maternal Screening Analyser ஆய்வகத்தை இங்கே திறந்து வைத்தார்கள். பல்வேறு இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை பெற்று வருகிறது.

அந்த வகையில் முதலமைச்சர் வழிகாட்டுதலோடு ரூ.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு தீர்வு என்கின்ற வகையில் Center of excellence என்கின்ற வகையில் விளையாட்டு மருத்துவத்திற்கு என்று மருத்துவக்கட்டமைப்பு தமிழ்நாடு துணை முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் உள்ள கிராமமாக இருந்தாலும், குக்கிராமமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம் மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு இடங்களில் இதற்குரிய மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருந்தாலும் மாநில மருத்துவமனைகளில் முதன்முறையாக சிகிச்சை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மருத்துவத்திற்கு என்ற மருத்துவக்கட்டமைப்பை தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ரூ.350 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்பு ரூ.180 கோடி மதிப்பீட்டிலாக மருத்துவக் கட்டமைப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். நாளை காலை (04.03.2026) ரூ.194.16 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயகலத்திலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்” என்றார்.

Read More

Previous Post

Rajya Sabha Election 2026 | மாநிலங்களவைத் தேர்தல்; எம்.பி.யாகும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

Next Post
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin