Last Updated:
கடந்த மார்ச் மாதத்தில் செய்தி மற்றும் தகவல் பிரிவில் நியூஸ் 18 குழும இணையதளங்களை 18 கோடியே 32 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 18 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களுடன் டைஸ்ம் குழுமம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்தி இணையதளங்களில் நியூஸ் 18 குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
காம்ஸ்கோர் என்ற அமைப்பு இணையதளங்களை ஆய்வு செய்து, எந்த இணையதளம் வாசகர்களால் அதிகம் படிக்கப்படுகிறது என்ற தகவல்களை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு அளித்துள்ள தகவல்களின் படி, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி மற்றும் தகவல் பிரிவில் நியூஸ் 18 குழும இணையதளங்களை 18 கோடியே 32 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 18 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களுடன் டைஸ்ம் குழுமம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களை பொறுத்தவரை நியூஸ் 18 குழுமத்தின் சமூகவலைதள பக்கங்களை 31 கோடியே 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ள டைம்ஸ் குழுமத்தின் இணையதளத்தை பார்வையிட்டவர்களை விட 55 விழுக்காடு அதிகம் ஆகும். இதேபோன்று நியூஸ்18 டாட் காம் இணையதளத்தை 25 கோடியே 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
அதேநேரம் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தை 18 கோடியே 30 லட்சம் பேர் மட்டும் பார்வையிட்டுள்ளனர். பிராந்திய மொழிகள் பிரிவிலும் நியூஸ் 18 குழுமத்தின் சமூக வலைதள பக்கங்கள் 18 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது.


