Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரி விதித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். அதேபோல சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா, சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் பரஸ்பர வரியை டிரம்ப் விதித்துள்ளார். அதன்படி வியட்நாமுக்கு 46%, தைவானுக்கு 32%, ஜப்பானுக்கு 24% வரி விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
April 03, 2025 7:54 AM IST