Last Updated:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சேர்க்கப்படலாம். லண்டனில் வெப்பம் அதிகரித்துள்ளது.
lords third test today bumrah archer included nw vjrஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள, இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில், கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3வது போட்டி இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரையில், விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் டங்-க்குப் பதில், ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடாத ஜஸ்பிரீத் பும்ரா விளையாட உள்ளார். இதேபோல நிதிஷ் ரெட்டிக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
லண்டன் நகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் உள்ள நிலையில், இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால், உள்ளூர் வெப்பத்தோடு, விளையாட்டு அனலும் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…
July 10, 2025 8:00 AM IST