• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் ‘Gold Capital’.. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு இணையான தங்கம் வைத்திருக்கும் ஒரு ‘மாநிலம்’..! | Tamil Nadu: India’s Gold Capital Holding 7000 Tonnes – Rivaling America’s Entire Official Gold Reserves!

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவின் ‘Gold Capital’.. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு இணையான தங்கம் வைத்திருக்கும் ஒரு ‘மாநிலம்’..! | Tamil Nadu: India’s Gold Capital Holding 7000 Tonnes – Rivaling America’s Entire Official Gold Reserves!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் ‘Gold Capital’.. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு இணையான தங்கம் வைத்திருக்கும் ஒரு ‘மாநிலம்’..!

தங்கம், இன்றைய வர்த்தக உலகில் வெறும் நகைகளாக மட்டும் அல்லாமல் ஒரு பவுர்ஹவுஸ் ஆக விளங்குகிறது. நிதியியல் ரீதியாகவும், தொழிற்துறை ரீதியாகவும் தங்கத்திற்கு எக்கச்சக்கமான டிமாண்ட் இருக்கும் வேளையில் தங்கம் முக்கியமான உலோகமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்க சுரங்கம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டின் பீரோவிலும் ஒரு குட்டி சுரங்கம் உள்ளது என்பது தான் உண்மை.

ஆம், அமெரிக்க அரசின் மொத்த தங்க இருப்பின் அளவுக்கு கிட்டத்தட்ட நிகராக தமிழ்நாட்டு மக்கள் நெருங்கிவிட்டனர். இந்திய மக்கள்தொகையில் வெறும் 5.5% மட்டுமே இருக்கும் தமிழ்நாட்டில், நாட்டின் மொத்த தங்க இருப்பில் சுமார் 30% உள்ளது. பொதுத்துறை வங்கிளிடம் இருக்கும் தங்கம் வேறு, மக்களிடம் இருக்கும் தங்கம் வேறு.

இந்தியாவின் 'Gold Capital'.. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு இணையான தங்கம் வைத்திருக்கும் ஒரு 'மாநிலம்'..!

உலகில் எந்தொரு நாட்டிலும், அந்நாட்டின் மத்திய வங்கியை காட்டிலும் அதிக தங்கம் மக்களிடம் இருக்காது, ஆனால் இந்தியாவில் மட்டுமே இந்த வித்தியாசம் உள்ளது. அதாவது ஆர்பிஐ காட்டிலும் அதிக தங்கத்தை இந்திய மக்கள் வைத்துள்ளனர்.

சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட தகவல் படி சுமார் 880.52 டன் தங்கத்தை தனது முக்கிய நாணய இருப்பாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதுவே அமெரிக்க மத்திய வங்கியிடம் சுமார் 8133 டன் தங்கம் உள்ளது. இது ஆர்பிஐ-யிடம் இருக்கும் தங்கத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகம், ஆனால் இந்திய மக்களிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா..?

இதுவே இந்திய மக்கள் தங்களுடைய தனிப்பட்ட சேமிப்புக்காக சுமார் 25000 – 35000 டன் தங்கத்தை வைத்துள்ளனர், இதன் மதிப்பு இந்தியாவின் ஜிடிபியை காட்டிலும் அதிகம் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த 35000 டன் தங்கத்தின் மதிப்பு 3.8 – 5 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரையிலான விஷயத்தை பெரும்பாலான மக்களுக்கு தெரியும், ஆனால் மாநில அளவில் பார்க்கும்போது பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் வெறும் 5.5 சதவீத மக்கள் கொண்ட தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 சதவீத அதாவது 7000 டன் தங்கம் தமிழ்நாட்டு மக்கள் கையில் மட்டும் உள்ளது, இந்தியாவில் எந்தொரு மாநிலத்திடமும் இத்தகைய தங்க இருப்பு இல்லை என்பது தான் முக்கியமான விஷயம்.

தமிழ்நாட்டை தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிய மாநில மக்கள் இணைந்து கிட்டத்தட்ட 50 சதவீத தங்கத்தை வைத்துள்ளனர். வட இந்திய மாநிலங்கள் என்றால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகப்படியான தங்கத்தை வைத்துள்ளனர்.

ஆனால் இந்தியாவில் தங்கம் அதிகம் நுகரும் மாநிலம் எனில், பொதுவான கருத்து கேரளா தான், ஆனால் 6 சதவீத பங்கீட்டை மட்டுமே கேரளா கொண்டுள்ளது. மகாராஷ்டிரா 15 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது.

இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் 7000 டன் தங்கம், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சுவிஸ், ஜப்பான் போன்ற முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகளில் இருக்கும் மொத்த அளவை காட்டிலும் அதிகம். உலகிலேயே அதிக தங்க இருப்பை கொண்டிருக்கும் அமெரிக்காவின் 8133 டன் தங்க இருப்பு அளவுக்கு தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் போட்டிப்போடுகிறது என்றால் மிகையில்லை.

Share This Article

English summary

Tamil Nadu: India’s Gold Capital Holding 7000 Tonnes – Rivaling America’s Entire Official Gold Reserves!

Tamil Nadu, with just 5.5% of India’s population, holds nearly 30% of the nation’s private gold reserves at around 7000 tonnes, making it India’s undisputed gold capital and nearly matching the United States’ total official gold holdings of 8133 tonnes. This massive household gold wealth in Tamil Nadu surpasses many top global central banks and highlights the state’s enormous role in India’s gold investment and precious metals economy.

Story first published: Tuesday, July 7, 2026, 13:43 [IST]

Other articles published on Jul 7, 2026

Read More

Previous Post

அமைச்சர்களுக்கு முதல்வர் அலுவலகம் ‘ரெட் கார்டு’.. தேவையில்லாத ஆய்வுக்கு தடை.. நிர்மல்குமார் பரபரப்பு | Minister Nirmal Kumar Said the CM Office has advised ministers against undertaking inspection unnecessarily

Next Post

அலி காமெனி இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு; கதறி அழுத ஈரான் நாட்டு மக்கள்! | A Photo album of Iran Khamenei’s funeral even in Iran

Next Post
அலி காமெனி இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு; கதறி அழுத ஈரான் நாட்டு மக்கள்! | A Photo album of Iran Khamenei’s funeral even in Iran

அலி காமெனி இறுதி ஊர்வலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு; கதறி அழுத ஈரான் நாட்டு மக்கள்! | A Photo album of Iran Khamenei’s funeral even in Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin