Last Updated:
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம்பரிதி, பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டராக சென்னையைச் சேர்ந்த 16 வயதான இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் இளம்பரிதி விளையாடினார். இதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வசமாக்கினார். இதன் மூலம் இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டர், தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை இளம்பரிதி பெற்றுள்ளார்.
இளம்பரிதிக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் இளம்பரிதி தனது திறமையால் மேலும் ஒரு ரத்தினத்தை சேர்த்திருப்பதாக பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டு சதுக்கத்தில் சூரியன் உதிக்கும்போது, திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு நகர்வையும் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மாற்றி, மேலும் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu’s 35th #Grandmaster Ilamparthi makes our reign on the 64 squares shine brighter! ♟️
He battles through brilliance to script history, earning his title and adding another jewel to Tamil Nadu’s crown of champions.
As the sun rises higher on Tamil Nadu chess, the… https://t.co/kncv4DlsSB
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 30, 2025
அதேபோல, இளம்பரிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கும், இந்திய சதுரங்கத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், தொடர்ந்து மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
October 30, 2025 9:24 PM IST


