மத்திய வங்கி தலையீடு, அதிகரித்து வரும் இறக்குமதிகள், குறைந்த ஏற்றுமதி வருவாய், பணவீக்க விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை நாணயம் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, வலுவான நாணயங்கள் அதிக கவனத்தைப் பெறும் நிலையில், குறைந்த மதிப்புள்ள நாணயங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. அந்த வகையில், உலகில் பலவீனமான நாணயங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் தற்போது பார்ப்போம்.


