• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 – 6.5% தான், 8

GenevaTimes by GenevaTimes
May 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 – 6.5% தான், 8
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 – 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், யதார்த்தத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 – 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளார் ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜன்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டுமெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 – 10 சதவிகிதம் என்ற அளவில் தொடர வேண்டுமென ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நார்த் வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் சேவை துறையைக் காட்டிலும், வேளாண் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை பெருமளவில் நிலவுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாட்டில், வேளாண் துறையின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்ட நிலவரத்தை ஒப்பிடுகையில், வசதியானோர் அதிகளவில் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகன விற்பனை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும், இருசக்கர வாகன விற்பனை ஒப்பீட்டளவில் அதிகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ளார் அவர். பொருளாதாரம் ஏற்றம் பெற, தனிநபர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மிக முக்கியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாணயத்தின் இருபக்கம் போல இந்திய பொருளாதாரம் திகழ்வதாகவும், ஒரு பக்கம், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களின் உயர்மட்ட முதலீடுகள் இந்தியாவில் ஈர்க்கப்படுகின்றன. மறுபக்கம், நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் வேலைவாய்ப்புக்காக அல்லாடுகின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.

Read More

Previous Post

சிஎஸ்கே-வை மீண்டும் தட்டித் தூக்குவோம் – பஞ்சாப் கேப்டன் சாம் கரன் சூளுரை – News18 தமிழ்

Next Post

Treadmill: டார்ச்சர் செய்த தந்தை; உயிரிழந்த 6 வயது சிறுவன் – சிசிடிவி காட்சியை பார்த்து கதறிய தாய்!

Next Post
Treadmill: டார்ச்சர் செய்த தந்தை; உயிரிழந்த 6 வயது சிறுவன் – சிசிடிவி காட்சியை பார்த்து கதறிய தாய்!

Treadmill: டார்ச்சர் செய்த தந்தை; உயிரிழந்த 6 வயது சிறுவன் - சிசிடிவி காட்சியை பார்த்து கதறிய தாய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin