• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் முதல் SIF தொடங்க குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட்டிற்கு ஒப்புதல் அளித்த செபி…! விதிகள் என்னென்ன…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் முதல் SIF தொடங்க குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட்டிற்கு ஒப்புதல் அளித்த செபி…! விதிகள் என்னென்ன…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 07, 2025 1:11 PM IST

சிறப்பு முதலீட்டு நிதிகள், நிதிச் சந்தைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட அனுபவம் வாய்ந்த மற்றும் அதிநவீன முதலீட்டாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

News18News18
News18

இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட், தற்போது ஒரு புதிய முயற்சி தொடங்கியுள்ளது. நாட்டின் முதல் சிறப்பு முதலீட்டு நிதியை (SIF) தொடங்க குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டிற்கு இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) ஒப்புதல் அளித்துள்ளது, இதற்கு QSIF ஈக்விட்டி லாங்-ஷார்ட் ஃபண்ட் என்று பெயரிடப்படும். மேலும் இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட SIF வகையின் கீழ் வரும். இந்தத் தகவலை குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் தனது X பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.

QSIF ஈக்விட்டி லாங்-ஷார்ட் ஃபண்ட் என்றால் என்ன?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட QSIF ஈக்விட்டி லாங்-ஷார்ட் ஃபண்ட் ஆனது இந்த மாதம், அதாவது ஆகஸ்ட் 2025-ல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி, பாரம்பரிய மியூச்சுவல் ஃபண்டுகளை விட மிகவும் சிக்கலான முதலீட்டு உத்தியைப் பின்பற்றும், இதில் பங்குகளில் நீண்ட மற்றும் குறுகிய நிலைகள் மூலம் லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.

சிறப்பு முதலீட்டு நிதி (SIF) என்றால் என்ன?

சிறப்பு முதலீட்டு நிதிகள், நிதிச் சந்தைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட அனுபவம் வாய்ந்த மற்றும் அதிநவீன முதலீட்டாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் பாரம்பரிய முதலீட்டைத் தாண்டி புதிய உத்திகள் மூலம் அதிக வருமானத்தைப் பெற விரும்புபவர்கள். இவற்றில் பின்வருவன:

  • நீண்ட மற்றும் குறுகிய கால உத்திகள்
  • அந்நிய மற்றும் அதன் வழித்தோன்றல் அடிப்படையிலான உத்திகள்
  • ஓபன்-எண்ட், க்ளோஸ்-எண்ட் மற்றும் இன்டர்வெல் ஃபண்டுகள் போன்ற நெகிழ்வான உத்திகள்

SIF நிதிகள் அதிக பணம் வைத்துள்ள, புதிய வழியில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கானது. இதில் முதலீடு செய்ய, குறைந்தது ரூ.10 லட்சத்தை முதலீடு செய்வது அவசியம்.

SIF முதலீட்டாளர்களுக்கான செபியின் விதிகள்:

SIF-களில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்புகளுக்கான வழிகாட்டுதல்களை SEBI வகுத்துள்ளது. ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்ச வரம்பைவிட, அதாவது ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக முதலீடு செய்தால், அவர்களின் யூனிட்கள் முடக்கப்படும். மேலும், அவர்களுக்கு 30 நாட்கள் மறுசீரமைப்புக்கான அவகாசம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்…! தொழில்முனைவோரை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசின் உதவித் திட்டங்கள்…

முதலீட்டாளர் அவகாசம் கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் SIFஇல் தனது முதலீடுகளை மறுசீரமைப்பு செய்தால், அவர்களின் யூனிட்கள் முடக்கப்படாது என்று செபி தெரிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர் கொடுக்கப்பட்ட காலகெடுவிற்குள் மறுசீரமைப்பு செய்ய தவறினால், சொத்து மேலாண்மை நிறுவனம் தானாகவே முடக்கப்பட்ட யூனிட்களை நடைமுறையில் உள்ள நிகர சொத்து மதிப்பில் (NAV) மீட்டெடுக்கும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 07, 2025 1:11 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவின் முதல் SIF தொடங்க குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட்டிற்கு ஒப்புதல் அளித்த செபி…! விதிகள் என்னென்ன…?

Read More

Previous Post

‘இதைப் பத்தியும் கொஞ்சம் சீரியஸாக யோசிங்க கம்பீர்’ – தினேஷ் கார்த்திக் வார்னிங்! | Think about this a little more seriously, Gambhir – Dinesh Karthik Warning

Next Post

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் – இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? – ட்ரம்ப் பதில்!

Next Post
US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் – இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? – ட்ரம்ப் பதில்!

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் - இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? - ட்ரம்ப் பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin