Last Updated:
இந்தியாவின் தனித்துவ அடையாள அமைப்பு என்ற ஆதார் அட்டை திட்டமானது செப்டம்பர் 29, 2010ல் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது.
மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாக இந்தியாவின் முதல் ஆதார் கார்டு பெற்றவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துபார் மாவட்டத்தில் உள்ள தெம்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ‘ஆதார் கார்டு பெண்மணி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ரஞ்சனா சோனாவேன் என்பவருக்கு முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி அவர்கள் பங்கேற்ற தேசிய ஆதார் அறிமுக நிகழ்வின்போது செப்டம்பர் 29, 2010ஆம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
யார் இந்த ரஞ்சனா சோனாவேன்? முதன்முதலாக இந்தியாவில் ஆதார் அட்டை பெற்றவர்தான் இந்த ரஞ்சனா சோனாவேன். ஆதார் கார்டு வழங்கப்பட்ட சமயத்தில் இவருக்கு 35 வயது. பல்வேறு பத்திரிகையாளர்கள் இவரை நேர்காணல் எடுக்க போட்டி போட்ட சமயம் அது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தெம்புலி என்ற குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.
இந்த தனித்துவமான அடையாள அட்டையை முதன்முதலாக பெற்ற பெருமையைக் கொண்டிருந்தாலும் இவர் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறார். சமையல் எரிவாயு, கழிப்பறை அல்லது மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
“ஆதார் அட்டையைப் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றதால் என்ன பயன்? இதில் எந்த ஒரு சாதனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு லாட்டரியை வென்றுவிட்டேன் என்பது போன்ற ஒரு விஷயம் இது கிடையாது. ஆட்சியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர்கள் பழங்குடியினர் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மையும் செய்யவில்லை. ஆனால், இங்கு பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள்தான். எனினும், எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் மீண்டும் ஓட்டுகளைக் கேட்பதற்கு அவர்கள் இங்கு வருகிறார்கள்” என்று சோனாவேன் ஒரு நேர்காணலில் பேசி இருந்தார்.
அன்றாட கூலித் தொழிலாளியான ரஞ்சனா, கிராமத் திருவிழாக்களில் பொம்மைகளை விற்று தன்னுடைய பிழைப்பை நடத்தி வருகிறார். தனக்கு சரங்கேடா பொருட்காட்சிக்குச் சென்று அங்கு ஒரு பொம்மை கடை திறக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் அங்கு பயணிப்பதற்குகூட தன்னிடம் காசு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரஞ்சனாவின் கணவரான சதாசிவம் என்பவரும் ஒரு கூலித் தொழிலாளி. கணவன் மனைவியாகிய இருவரும் கஷ்டப்பட்டு தங்களுடைய மூன்று குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.
இந்தியாவின் தனித்துவ அடையாள அமைப்பு என்ற ஆதார் அட்டை திட்டமானது செப்டம்பர் 29, 2010ல் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஜனவரி 2009இல் அமைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் மத்திய ஆட்சி மாறிய சமயத்தில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, பல்வேறு விதமான சேவைகளோடு ஆதார் எண் இணைக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 1.38 பில்லியன் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் முயற்சிக்கு ஒரு மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
November 30, 2025 3:08 PM IST


