• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டின் நிறுவனர்.. யார் அவர், நிகர மதிப்பு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 17, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டின் நிறுவனர்.. யார் அவர், நிகர மதிப்பு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 17, 2025 3:16 PM IST

கேம்பஸ் ஆக்டிவ்வேர் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஷூ நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் நைக், அடிடாஸ் மற்றும் பூமா போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுக்கு கேம்பஸ் ஆக்டிவ்வேர் கடும் போட்டியை அளிக்கிறது.

News18News18
News18

கேம்பஸ் ஆக்டிவ்வேர் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஷூ நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் நைக், அடிடாஸ் மற்றும் பூமா போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுக்கு கேம்பஸ் ஆக்டிவ்வேர் கடும் போட்டியை அளிக்கிறது. டெல்லியை சேர்ந்த தொழில்முனைவோர் ஹரி கிருஷ்ணா அகர்வால் நிறுவிய இந்த நிறுவனம், 20,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் 35 பிரத்யேக கடைகளுடன் வேகமாக வளர்ந்தது.

இது இந்தியாவில் ஐந்து தொழிற்சாலைகளை இயக்குகிறது மற்றும் பல நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் ஆண்டுதோறும் 15 மில்லியன் ஜோடிகளை விற்பனை செய்கிறது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் வருண் தவான் போன்ற பிரபலங்கள் இந்த பிராண்டை ஆதரித்துள்ளனர். ஹரி கிருஷ்ணா அகர்வாலின் பயணம் ஊக்கமளிக்கிறது. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு மரபுவழி வணிகம் கிடையாது.

நிதிப் போராட்டங்கள் காரணமாக, அவர் இளம் வயதிலேயே வேலை செய்யத் தொடங்கினார். படிப்படியாக வணிகத் திறன்களைக் கற்றுக்கொண்டார். 18 வயதில், அவர் சிறு வணிகங்களில் பரிசோதனை செய்ய தொடங்கிய அவர், 1983ம் ஆண்டில் வெளிப்புற நிதியுதவி இல்லாமல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவை நம்பி, “ஆக்ஷன்” பிராண்டின் கீழ் விளையாட்டு காலணி விற்பனையை தொடங்கினார்.

Also Read: MRP உடனே ஜிஎஸ்டி இருக்குமா? அல்லது தனியாக கட்ட வேண்டுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

1991ம் ஆண்டில், இந்தியா தனது சந்தையை வெளிநாட்டு பிராண்டுகளுக்குத் திறந்தபோது, ​​அடிடாஸ், நைக் மற்றும் பூமா ஆகியவை நுழைந்தன. ஆனால் அவற்றின் காலணிகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் விலை உயர்ந்தவை. இந்த இடைவெளியை கண்ட அகர்வால், மலிவு விலையில், ஆனால் உயர்தர விளையாட்டு காலணிகளில் கவனம் செலுத்தி 2005ல் கேம்பஸ் ஷூக்களை அறிமுகப்படுத்தினார். அவரது உத்தி பலித்தது. மேலும் நிறுவனம் விரைவாக லாபம் ஈட்டியது. இன்று, கேம்பஸ் ரூ.1,000க்கும் குறைவான ஷூ சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது பிரீமியம் வகையிலும் விரிவடைந்துள்ளது.

அறிக்கைகளின்படி, மே 2022ல், கேம்பஸ் ஆக்டிவ்வேர் பொதுவில் வெளியிடப்பட்டது. பங்குகள் IPO விலையை விட 23% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டன. இது அகர்வாலின் செல்வத்தை கணிசமாக அதிகரித்தது. மேலும் ஃபோர்ப்ஸ் அவரது நிகர மதிப்பை $1.1 பில்லியனாக மதிப்பிடுகிறது. 2023ம் ஆண்டில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் தொடங்கி நிறுவனம் சர்வதேச அளவில் விரிவடைந்தது. அவரது மகன், தொழில்துறை பொறியாளரான நிகில் அகர்வால், இப்போது நிறுவனத்தை தலைமை நிர்வாக அதிகாரியாக வழிநடத்தி வருகிறார்.

First Published :

March 17, 2025 3:16 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டின் நிறுவனர்.. அவர் யார், நிகர மதிப்பு தெரியுமா?

Read More

Previous Post

IPL 2025: ஐந்து முறை சாம்பியன்.. நான்கு முறை ரன்னர் அப்.. ஐபிஎல் தொடரின் சிஎஸ்கேவின் வெற்றி பயணம்

Next Post

கைவிடுதலை சமாளிக்க மூத்த குடிமக்கள் மசோதாவை விரைவுபடுத்த வேண்டும் – MCA மகளிர் பிரிவு – Malaysiakini

Next Post
கைவிடுதலை சமாளிக்க மூத்த குடிமக்கள் மசோதாவை விரைவுபடுத்த வேண்டும் – MCA மகளிர் பிரிவு – Malaysiakini

கைவிடுதலை சமாளிக்க மூத்த குடிமக்கள் மசோதாவை விரைவுபடுத்த வேண்டும் – MCA மகளிர் பிரிவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin