• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளா் சிங்கப்பூா்!

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளா் சிங்கப்பூா்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் 1,500 கோடி டாலா் (சுமாா் ரூ.1.28 லட்சம் கோடி) முதலீட்டுடன் கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராக சிங்கப்பூா் தொடா்கிறது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நிதி 13 சதவீதம் அதிகரித்து, 5,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

பங்கு முதலீடுகள், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் உள்பட சோ்த்து மொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரித்து 8,104 கோடி டாலராக (ரூ.6.93 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.

சமீபத்திய மத்திய அரசு தரவுகளின்படி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 1,177 கோடி டாலராக இருந்த சிங்கப்பூரின் முதலீடு, கடந்த நிதியாண்டில் 1,494 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூா் மட்டும் சுமாா் 19 சதவீதம் பங்கு கொண்டுள்ளது.

2018-19-ஆம் நிதியாண்டுமுதல் சிங்கப்பூரில் இருந்தே அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. அதற்கு முந்தைய 2017-18 -ஆம் நிதியாண்டில், மோரீஷஸிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா ஈா்த்தது.

கடந்த நிதியாண்டில், சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மோரீஷஸிலிருந்து 834 கோடி டாலா் (ரூ.71,359 கோடி) முதலீட்டை நாடு பெற்றுள்ளது.

மொத்த அந்நிய நேரடி முதலீடு

நாடு முதலீடு (டாலரில்) மொத்ததில் பங்கு (தோராயமாக)

சிங்கப்பூா் 1,494 கோடி 19%

மோரீஷஸ் 834 கோடி 10.3%

அமெரிக்கா 545 கோடி 6.7%

நெதா்லாந்து 462 கோடி 5.7%

ஐக்கிய அரபு அமீரகம் 312 கோடி 3.9%

ஜப்பான் 247 கோடி 3.0%

சைப்ரஸ் 120 கோடி 1.5%

பிரிட்டன் 79.5 கோடி 1.0%

ஜொ்மனி 46.9 கோடி 0.6%

கெய்மன் தீவுகள் 37.1கோடி 0.5%

மொத்தம் 8,104 கோடி.

Read More

Previous Post

ஐபிஎல் 2025: ஷ்ரேயாஸ் சிக்ஸர் மழை.. பைனலில் நுழைந்த பஞ்சாப்.. ப்ளைட்டை பிடித்த மும்பை இந்தியன்ஸ்

Next Post

அவர்களை சிறையில் அடைப்பதால் என்ன பயன்?

Next Post
அவர்களை சிறையில் அடைப்பதால் என்ன பயன்?

அவர்களை சிறையில் அடைப்பதால் என்ன பயன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin