• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் மாநிலங்களில் அதிகரிக்கும் குறைந்த எடை பிறப்பு விகிதங்கள்…! ஆய்வில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவின் மாநிலங்களில் அதிகரிக்கும் குறைந்த எடை பிறப்பு விகிதங்கள்…! ஆய்வில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவு நிகழ்வில் 4 மாநிலங்கள் மட்டுமே பங்களிக்கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்னும் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறக்கும் விகிதம் சற்று அதிகமாகவே உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்திய பகுப்பாய்வு காட்டுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் பிரிட்டிஷ் மெடிக்கல் BMJ குளோபல் ஹெல்த்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) ஒரு குழந்தை பிறப்பது என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட தாய்க்கு இருக்கும் அடிப்படை சுகாதார பிரச்சனைகள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து இருப்பது போன்றவற்றைக் குறிக்கலாம். மேலும், குறைந்த எடையுடன் பிறப்பது என்பது குழந்தையின் எதிர்கால அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் பிற்கால வாழ்க்கையில் நாள்பட்ட நிலைமைகளுக்கு எளிதில் பாதிக்கப்படக் கூடிய தன்மையை குறிக்கிறது.

அமெரிக்காவின் டியூக் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தென் கொரிய ஆய்வு நிறுவனங்கள் தேசிய கணக்கெடுப்பின் ஐந்து அலைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தன. இதில் ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் குறைந்த எடையோடு பிறக்கும் குழந்தைகளின் விகிதமானது பரவலாக எட்டு சதவீத புள்ளிகள் சரிந்துள்ளது தெரியவந்தது. கடந்த 1993-ஆம் ஆண்டில் 26-லிருந்து, கடந்த 2021ஆம் ஆண்டில் 18-ஆக குறைந்துள்ளது.

மாநில அளவிலான சராசரி பிறப்பு எடை பாதிப்பு 5 கணக்கெடுப்புகளில் 1993 மற்றும் 1999-ல் 25%-ஆகவும், 2006-ல் 20%-ஆகவும், 2016-ல் 17%-ஆகவும் குறைந்தது; 2021-ஆம் ஆண்டில் 16%-ஆகவும், இந்தியா முழுவதும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த பாதிப்பு 1993-ல் 26%ஆகவும், 2021-ல் 18%-ஆகவும், ஏற்கனவே குறிப்பிடப்படி 8 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.

அதேபோல ஐந்தாவது அலையிலிருந்து (2019-21) தரவுகளின் பகுப்பாய்வு, 42 லட்சம் குழந்தைகள் ஒரே ஆண்டில் குறைந்த எடையுடன் பிறந்ததாக கூறுகிறது. இதில் கிட்டத்தட்ட பாதி (47 சதவீதம்) உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டில் இந்த பாதிப்பு ராஜஸ்தானில் (48 சதவீதம்) மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரம் 2021-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகியவை 22 சதவீதத்துடன் அதிகமாக இருந்தன. மிசோராம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் 1993 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் குறைந்த பிறப்பு எடை நிகழ்வை பொறுத்தவரை மிக குறைந்த பாதிப்பையே கொண்டிருந்தன.

ஆய்வு முடிவில் “இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த பாதிப்பு 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019-21 கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன. அதேபோல ஐந்தாவது அலையின் தரவுகள், குறைந்த எடை மற்றும் பிறக்கும்போதே சராசரியை விட குறைந்த அளவைக் கொண்ட குழந்தைகள் முறையான கல்வி இல்லாத பெண்களுக்கும், ஏழ்மையான வீட்டு பெண்களுக்கும் பிறக்க கணிசமாக அதிக வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாக ஆய்வாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறைந்த சமூகப் பொருளாதார நிலை, சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் இல்லாமை ஆகியவற்றுக்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இறுதி முடிவுகள் “குறைந்த பிறப்பு எடையின் பரவல் மற்றும் காலப்போக்கில் மாநிலங்களுக்கிடையில் ஒன்றிணைவதில் இருக்கும் பொதுவான சரிவை சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் விவகாரத்தில் ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் இருந்தபோதிலும், சில மாநிலங்களில் இந்நிகழ்வு அதிகமாக இருப்பது தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளின் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரம் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள் 1993-ஆம் ஆண்டில் 48,959-ஆக இருந்த நிலையில், கடந்த 2021-ல் இந்த எண்ணிக்கை 2,32,920-ஆக உயர்ந்துள்ளது. பிறக்கும் போதே நல்ல எடையுடன் பிறந்த குழந்தைகளின் விகிதம் காலப்போக்கில் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 20, 2025 11:40 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தியாவின் மாநிலங்களில் அதிகரிக்கும் குறைந்த எடை பிறப்பு விகிதங்கள்…! ஆய்வில் வெளியான தகவல்

Read More

Previous Post

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 83 சீனப் பிரஜைகள்

Next Post

தோனி, பாண்டிங் இல்ல… ஐசிசி கோப்பைகளை அதிகம் வென்ற கேப்டன் இவர் தான்.. யார் தெரியுமா உங்களுக்கு?

Next Post
தோனி, பாண்டிங் இல்ல… ஐசிசி கோப்பைகளை அதிகம் வென்ற கேப்டன் இவர் தான்.. யார் தெரியுமா உங்களுக்கு?

தோனி, பாண்டிங் இல்ல... ஐசிசி கோப்பைகளை அதிகம் வென்ற கேப்டன் இவர் தான்.. யார் தெரியுமா உங்களுக்கு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin