Last Updated:
பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது.
மும்பையில் நடைபெற்ற ‘ஜியோ-பிளாக்ராக்’ (Jio-BlackRock) உரையாடல் நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் ஆகியோர் வர்த்தகம் சார்ந்த ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
லாரி ஃபிங்க் தனது உரையில், தற்போதைய காலத்தை “இந்தியாவின் சகாப்தம்” என்று வர்ணித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது- இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.
குறிப்பாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது. ஒரு சிறந்த முதலீட்டாளரின் பணி ஒவ்வொரு சந்தை சலசலப்பிற்கும் எதிர்வினையாற்றுவது அல்ல. மாறாக நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து நிலைத்திருப்பதே ஆகும்.
வங்கி வைப்புத்தொகைகளில் பணத்தை வைத்திருப்பதை விட, மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்வது வரலாற்று ரீதியாகச் சிறந்த லாபத்தைத் தந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறை ஏழு மடங்கு வளர்ச்சியடைந்து, சுமார் 80 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
“இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது!” – முதலீட்டாளர்களுக்கு லாரி ஃபிங்க் வழங்கிய நம்பிக்கை


