02
இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் அல்லது NNI 2023-2024 ஆண்டில் தோராயமாக ரூ.1,85,854 ஆக இருந்த நிலையில், ஒரு மாநில முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது. இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம். ஆக மொத்தம் இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பையும் சேர்த்தால் ரூ.1,630 கோடி வருகிறது.


