நம் நாட்டில் மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவமனை நடத்துவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்றுள்ள பெரும்பாலான மருத்துவர்கள் சொந்தமாக சிறு க்ளீனிக்காவது வைத்துள்ளார்கள். இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் பல வருடங்களாக சேவையாற்றிய பின் சொந்தமாக மருத்துவமனை தொடங்குகிறார்கள். இன்னும் சில மருத்துவர்களோ வேறு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த போதிலும், சொந்தமாக ஒரு மருத்துவமனை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். சிலர் மருத்துவ படிப்பு முடிந்த உடனேயே மருத்துவமனையை ஆரம்பித்து, நாளடைவில் பல ஊர்களில் தங்கள் மருத்துவமனை கிளையை ஒவ்வொன்றாக திறந்து மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள்.
இன்று நாம் பார்க்கப் போகும் நபர் இந்தியாவிலேயே பணக்கார மருத்துவர்களில் ஒருவர். ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் பணக்கார நபர்களின் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. அவர் வேறு யாருமல்ல, Medanta – The Medicity-யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நரேஷ் தெரான் பற்றியே நாம் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2287-வது இடத்தில் உள்ள நரேஷின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.11,680 கோடியாகும். இந்தியாவின் முன்னனி இதய அறுவை சிகிச்சை நிபுணரான நரேஷ் தெரான், 2007-ம் ஆண்டு மெதாந்தா (Medanta) மருத்துவமனையை தொடங்கினார்.
இதையும் படிங்க :
வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கி… 9% வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இதுதான்! – முழு விபரம் இதோ!
அன்று குருகிராம் நகரில் தொடங்கப்பட்ட மருத்துவமனை இன்று இந்தியாவெங்கும் ஆலமரமாக விரிவடைந்துள்ளது. இதய அறுவை சிகிச்சை துறையில் சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் அணுபவம் கொண்ட டாக்டர்.நரேஷ் தெரானிற்கு 2001-ம் ஆண்டு பதம் பூஷன் விருதையும் 1991-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது மத்திர அரசு. இதுவரை 48,000 முறைக்கு மேல் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார் நரேஷ். லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை நிறைவு செய்த நரேஷ், 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு பிலிடீபியா நகரில் உள்ள தாமஸ் ஜெஃபர்ஸன் பல்கலைகழக மருத்துவமனையில் சேர்ந்தார்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்று 77 வயதாகும் நரேஷ், நாடு முழுவதும் உள்ள Medanta மருத்துவமணையை வெர்றிகரமாக தலைமையேற்று நடத்தி வருகிறார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி நிலவரப்படி இதன் சந்தை மதிப்பு ரூ.35,926 கோடியாகும். Medanta மருத்துவமனையின் தாய் நிறுவனமான குளோபல் ஹெல்த்தை 2022-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிட வைத்தார் நரேஷ் தெரான். நேற்றைய நிலவரப்படி தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.1,338 ஆகும். வட இந்தியாவில் ஐந்து மருத்துவமனைகளை சொந்தமாகக் கொண்டுள்ள Medanta-வில் ஒரே சமயத்தில் 2,700 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)