Last Updated:
இந்தியாவில் இன்று நாம் காணும் பட்ஜெட் முறைக்கு 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கலின் ஒரு பகுதியாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதன்படி 2027 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி 7.2 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின்போது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை மகிழ்விக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறைகள் ஒருபக்கம் நடந்தாலும், பட்ஜெட் குறித்த சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்வதில் நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் காலத்தின்போது தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இன்று நாம் காணும் பட்ஜெட் முறைக்கு 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தால் பிரிட்டிஷ் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அந்தப் பொருளாதாரச் சரிவைச் சரிசெய்ய, விக்டோரியா மகாராணியால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் தான் ஜேம்ஸ் வில்சன்.
இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு…


