Last Updated:
பிரதமர் மோடி: இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியைக் காட்டிலும் குறைவு. சுற்றுச்சூழல் வழக்குகளுக்கான மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தார்.
கார்பன் உமிழ்வு விவகாரத்தில் வளரும் நாடுகள் மீது தவறாகப் பழி சுமத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நடைபெற்ற ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமை தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலான செல்போன் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமாக முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தர். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டிச் சாதனை படைத்த ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


