சீனியர் சிட்டிசன்கள் ஓய்வு காலத்திற்குப் பிறகும் கூட தங்களுடைய வாழ்க்கை முறையை தொடர்ந்து பராமரிப்பதற்கு சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சேமிப்பு என்று சொல்லும்போது ஒரு சிலர் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்ய நினைக்கும் மிகவும் பிரபலமான ஒரு திட்டம் ஃபிக்சட் டெபாசிட். இந்த பதிவில் முன்னணி வங்கிகள் சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கான பாதுகாப்பான, அதே நேரத்தில் எளிமையான ஒரு முதலீடு என்பது ஃபிக்சட் டெபாசிட்டுகள். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் சந்தையுடன் எந்த ஒரு தொடர்பையும் கொண்டிருக்காத காரணத்தினால் நம்முடைய முதலீட்டுத் தொகை மூலமாக நிர்ணயிக்கப்பட்ட வட்டியை பெற்றுக் கொள்ளலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC பேங்க் மற்றும் ICICI வங்கி ஒரு வருட சீனியர் சிட்டிசன் FDகளுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பற்றி பார்க்கலாம். மேலும் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும்போது கிடைக்கக்கூடிய உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் திட்டம் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கான SBI ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு வருடத்திற்கு 7.30 சதவீத வட்டியை வழங்குகிறது.
SBI சீனியர் சிட்டிசன் ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட்டில் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு?
ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 5,37,511 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்களுக்கான HDFC வங்கி வட்டி விகிதம்
HDFC வங்கி ஒரு வருடத்திற்கு 7.10 சதவீத வட்டி வழங்குகிறது.
ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு HDFC வங்கி வழங்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு?
ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும் சீனியர் சிட்டிசன்கள் மெச்சூரிட்டியின்போது 5,36,456 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிக்க:
தீபாவளிக்கு வீட்டுக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கும் வங்கிகள்… முழு லிஸ்ட் இதோ
ICICI வங்கியின் சீனியர் சிட்டிசன் வட்டி விகிதம்
ICICI வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு 7.20% வட்டியை ஒரு வருடத்திற்கு கொடுக்கிறது.
ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு எவ்வளவு மெச்சூரிட்டி தொகை கிடைக்கும்?
ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களின் அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆனவுடன் 5,36,984 ரூபாயை பெறலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)