Last Updated:
மெட்டா நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டனம்; வாட்ஸ் ஆப்பின் தனியுரிமை விவகாரம் தீவிரம்.
இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால் நாட்டில் இருந்து வெளியேறுமாறு வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் காட்டமாக கண்டித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பயனர்களின் தனியுரிமை விதிகளை மீறியதாக கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு சிசிஐ என்ற ஒழுங்குமுறை ஆணையம் 213 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதனை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்த நிலையில், மெட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு தகவலை கூட திருடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தலைமை நீதிபதி, நாட்டின் சட்டத்திட்டங்களுடன் விளையாடக்கூடாது என்று காட்டமாக தெரிவித்தார். தகவல் பரிமாற்ற சந்தையில், மற்ற நிறுவனங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், வாட்ஸ் ஆப் ஆதிக்கம் நிறைந்த செயலியாக மாறி விட்டது என்று குற்றம் சாட்டிய தலைமை நீதிபதி, ஒரு மருத்துவர் வாட்ஸ் ஆப்பில் தனக்கு பரிந்துரைத்த மருந்தின் விளம்பரத்தை உடனடியாக மற்ற தளங்களில் பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.
‘இந்தியாவின் சட்டவிதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால்..’ மெட்டா நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் காட்டம்


