• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நீதா அம்பானி முதலிடம்.. ஃபார்ச்சூன் இந்தியா இதழ் பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நீதா அம்பானி முதலிடம்.. ஃபார்ச்சூன் இந்தியா இதழ் பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 12, 2026 10:25 AM IST

வணிகம், சமூகப் பணி, மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பு எனப் பன்முகத் திறமையாளராக நீதா அம்பானி விளங்கி வருகிறார்

விருதைப் பெற்றுக் கொள்ளும் நீதா அம்பானி
விருதைப் பெற்றுக் கொள்ளும் நீதா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் (Reliance Foundation) நிறுவனரும் மற்றும் தலைவருமான நீதா அம்பானி, ஃபார்ச்சூன் இந்தியா (Fortune India) இதழ் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்கள் (Most Powerful Women) பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அங்கீகாரமானது அவரது தொலைநோக்குத் தலைமைத்துவம், சமூக மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இந்தியாவின் மிக உயரிய வணிக மற்றும் சமூகப் செல்வாக்கு மிக்க பெண்களைக் கௌரவிக்கும் இந்தப் பட்டியலில் நீதா அம்பானிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான வெற்றி என்பது நாம் மாற்றியமைக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த விருது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

நிறுவனங்களை உருவாக்குவதிலும், பின்தங்கிய சமூகங்களை உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவதிலும் நீதா அம்பானி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது சேவைகளை உலகம் கவனித்து வருகிறது என்பதை இந்த விருது எடுத்துரைப்பதாக உள்ளது.

நீதா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலமாக 2 கோடியே 90 லட்சம் குழந்தைகள் உள்பட 10 கோடிக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளார்கள்.

பின்தங்கிய குழந்தைகளுக்குத் தரமான கல்வி மற்றும் நவீன மருத்துவ வசதிகளைக் குறைந்த செலவில் கொண்டு சேர்ப்பது, கிராமப்புறப் பெண்களின் சுயசார்பு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை ஊக்குவிப்பது, இந்தியப் பாரம்பரியக் கலைகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதுடன், அடிமட்ட அளவிலான விளையாட்டுத் திறமைகளை (Grassroots sports) அடையாளம் கண்டு வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை  நீதா அம்பானியின் தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

வணிகம், சமூகப் பணி, விளையாட்டு குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பு எனப் பன்முகத் திறமையாளராக நீதா அம்பானி விளங்கி வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள இந்த விருது, இன்றைய இளம் பெண் தலைவர்களுக்கும் மற்றும் தொழில்முனைவோருக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். சமூக மாற்றத்தையும் பெருநிறுவனப் பொறுப்பையும் (CSR) எவ்வாறு இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு இவரது தலைமை ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பல்வேறு துறை நிபுணர்கள் நீதா அம்பானிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

First Published :

Jul 12, 2026 10:25 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நீதா அம்பானி முதலிடம்.. ஃபார்ச்சூன் இந்தியா இதழ் பாராட்டு

Read More

Previous Post

பாடசாலை சீருடையில் மாற்றம்?

Next Post

ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை – விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

Next Post

ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை – விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin