இந்தியாவின் பணக்காரக் கிராமத்தை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. அந்த கிராமத்தை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் ஹிவாரே பஜார் என்ற கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த கிராமம் ‘கோடீஸ்வரர்களின் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் 305 குடும்பங்களில் 80 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர்.
இந்த கிராம மக்களின் முதன்மையான வருமானம் விவசாயம். 1980 மற்றும் 1990களில் கடுமையான வறட்சியின் காரணமாக இந்த கிராமம் ஒரு காலத்தில் வறுமையுடன் போராடியது. இதையடுத்து கிராம மக்கள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு இடம்பெயர தொடங்கினர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம். 1990ஆம் ஆண்டில் ஹிவாரே பஜாரில் உள்ள 90% குடும்பங்கள் ஏழைகளாக இருந்தனர்.
Also Read:
அமைச்சர் பேச்சை விமர்சித்த மாணவர்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!
கிராம மக்கள் ஒன்றிணைந்து, 1990ல் ‘கூட்டு வன மேலாண்மை குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவின் கீழ், வறட்சியை எதிர்த்து கிணறு தோண்டவும், மரங்கள் நடவும் தொடங்கினர். மேலும் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விதைப்பதற்கு தடை விதித்தனர். ஹிவாரே பஜாரில் இப்போது 300க்கும் மேற்பட்ட கிணறுகள் இருப்பது அவர்களின் கடின உழைப்பு மற்றும் ஒற்றுமைக்கு ஆதாரமாகும். மேலும், ஆழ்குழாய் கிணறு கட்டி முடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டமும் 30 அடியாக உயர்ந்துள்ளது.
ஹிவாரே பஜாரில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தின் மூலம் மட்டுமே வருமானத்தை ஈட்டுகின்றனர். கிராமத்தின் தனிநபர் வருமானம், நாட்டின் முதல் 10 சதவீத கிராமப்புறப் பகுதிகளில் சராசரியாக மாத வருமானம் ரூ.890ஐ விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களின் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். ஏப்ரல் 24, 2020 அன்று நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர் பாதுகாப்பில் கிராம வாசிகளின் உணர்திறனையும், தண்ணீரை வீணாக்குவதை தடுக்க பயிர் முறையில் மாற்றங்களை கொண்டு வந்ததையும் பாராட்டினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)