மும்பை: இந்தியாவின் உள்கட்டமைப் பில் 5 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக சரக்கு போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிபி வேர்ல்டு தலைமைச் செயல் அதிகாரியும் அக்குழுமத்தின் தலைவருமான சுல்தான் அகமது பின் சுலேயம் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி வலையமைப்பை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இந்தியா வில் கூடுதலாக 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் செயல் பட்டு வரும் டிபி வேர்ல்டு ஏற்கெனவே 3 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், கூடுதலாக 5 பில் லியன் டாலரை உள்கட்டமைப் பில் முதலீடு செய்கிறது. இதன் மூலம், இந்தியா வில் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வலுப்படும் என் பதுடன், உலகளாவிய வர்த் தகத்தில் இந்தியாவின் போட் டித்தன்மை அதிகரிக்கும்.
இந்தியாவின் வளர்ச்சியில் கடந்த மூன்று தசாப்தங்களாக டிபிவேர்ல்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த நிலை யில், இந்த புதிய உத்திசார்ந்த முதலீடு கூட்டாண்மை நிறு வனங்களுடன் இணைந்து இந்தி யாவின் கடல்சார் மற்றும் தள வாட துறையை உலகளாவிய வர்த்தகத்தில் மேம்படுத்தும். இவ்வாறு சுல்தான் அகமது தெரிவித்தார்.

