மலேசியா, இந்த ஏவுகணையை தனது Su-30 போர் விமானங்கள் மற்றும் Kedah-class போர் கப்பல்களில் பொருத்த திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் விருப்பம் காட்டுகின்றன. எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமான் மற்றும் சிலி, பிரேசில், அர்ஜென்டினா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் தெரிவித்து வருகின்றன.


