• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘இந்தியாவால் 10 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்’ – நிர்மலா சீதாராமன்

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“அதிகமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) மற்றும் ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்த முடியும். ஆனால் இதற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் மிகப்பெரிய அளவிலான முயற்சி தேவைப்படும்.

இந்தியாவால் 10 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். உங்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டும் நான் இதை சொல்லவில்லை. இது உண்மையில் சாத்தியமான ஒன்றுதான். 2015-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை) நிறுவனங்களின் வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கக்கூடும்.

நாம் எதிர்மறையான மனப்பான்மையைக் கடந்து, நேர்மறையாக சிந்திக்கவும், களத்தில் நிகழும் முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும் வேண்டும். எதிர்மறையாக பேசுபவர்கள் பலர் உள்ளனர். இந்தியா தோல்வியடைவதைக் கண்டு மறைமுகமாக மகிழ்ச்சி அடைபவர்களும் பலர் உள்ளனர். இத்தகைய மனநிலையை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களை நேர்மறையாகச் சிந்திக்க நாம் தூண்ட வேண்டும்.

உற்பத்தியாளர்களை சந்தைகளுடன் இணைப்பதிலும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்துத் துறைகளையும் சென்றடையும்.

விவசாயிகள் தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான உரங்களை வாங்கும் உரிமையைக் கொண்டிருப்பார்கள். அதே வேளையில், தங்கள் பயிர்களுக்குத் தேவையான உரத்தின் அளவு குறித்த தகவல்களைத் தொழில்நுட்பம் அவர்களுக்கு வழங்கும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் அதிகப்படியான பயன்பாடு, மண் மற்றும் நீரை மாசுபடுத்தி வருகிறது. இந்த சிக்கலைத் தீர்க்கத் தொழில்நுட்பம் உதவக்கூடும்.

எனவே, தொழில்நுட்பங்கள் எவ்வளவு விரைவாக அனைத்து துறைகளையும் சென்றடைகிறதோ, அந்த அளவிற்கு அது இந்தியாவிற்கு நன்மை பயக்கும். உற்பத்தியும் சிறந்த முறையில் நடைபெறுவதால், நாட்டின் வளர்ச்சிக்கு அது மேலும் வலுசேர்க்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ‘இந்தியாவால் 10 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்’ – நிர்மலா சீதாராமன் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தாய்லாந்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

Next Post

மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

Next Post
மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin