இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றை காண ஏராளமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு பயணிக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Also Read:
அடுத்தடுத்து மரணம்…. பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து அவரின் தந்தையும் உயிரிழப்பு
வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மேலும், 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யார், யார் செல்லலாம்
இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மணி, நெதர்லாந்து பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
.
&w=750&resize=750,375&ssl=1)
