சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற அமைப்பின் (NEA) இரண்டு இந்திய அதிகாரிகளிடம் புகைபிடித்து பிடிபட்ட ஆடவர் ஒருவர் அதிகாரிகளை இன ரீதியான நோக்கங்களைக் கொண்டவர்கள் என்று கடுமையாக விமர்சித்து காணொளி வெளியிட்டார்.
இந்த சம்பவம் சாங்கி விமான நிலைய முனையம் 1 இல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!
காணொளியில் தன் முகத்தை காட்டாத அந்த ஆடவர் தன்னை சீனர் என்றும் அடையாளப்படுத்துகிறார்.
மேலும், அதே குற்றத்தை செய்த இந்திய தம்பதியினரையும் இந்திய ஆடவர் ஒருவரையும் இந்திய அதிகாரிகள் விடுவித்ததாகவும் தன்னை மட்டும் பிடித்து அபராதம் போட்டதாகவும் அவர் அந்த காணொளியில் கூறினார்.
காணொளி : https://www.instagram.com/p/DNhz5YvvsSd/
தனக்கு மட்டும் அபராதம் விதித்ததற்காக அதிகாரிகள் இருவரும் இன பாகுபாடு கொண்டவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இருவரும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
thomasong220 என்பவர் டிக்டாக் பதிவில் கூறியதாவது; அவருக்கான அபராத வழக்கு செப்டம்பரில் உள்ளது என்றும் நான் நிச்சயமாக அபராதத்தை செலுத்துவேன், ஆனால் இந்தியர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நிச்சயமாக சவால் விட்டு சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிட்டதட்ட 6 லட்சம் பார்வைகளை கடந்த அந்த காணொளி, ஆயிரக்கணக்கான பின்னூட்ட கருத்துக்களையும் பெற்றது.
கமெண்ட்டில் ஒருவர் கூறியதாவது; “தவறு தவறுதான், அதைச் சரி செய்ய இன வாதத்தை கொண்டு வராதே” என்றார்.
போலீசில் புகார்
இன்று (ஆகஸ்ட் 19) NEA அறிக்கையில் கூறியதாவது: “முனையம் 1 இல் உள்ள பிக்-அப் பாயிண்டிற்கு அருகில் ஒருவர் புகைபிடிப்பதை அமலாக்க அதிகாரிகள் கண்டனர் என்றும், இது புகைபிடித்தல் தடை சட்டத்தின் பிரிவு 3 (2) இன் கீழ் குற்றமாகும் என்றும் சொன்னது.
ஆடவர் செய்த குற்றம் அதிகாரிகளின் உடலில் அணிந்திருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆடவர் செய்த குற்றத்திற்காகவே அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினர் என்றும் அப்போது அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் NEA தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்
The post “இந்தியர்களை மட்டும் விடுறிங்க.. எனக்கு மட்டும் அபாரதமா”- சாங்கி ஏர்போர்ட்டில் புகைபிடித்து சிக்கிய ஆடவர் அடாவடி appeared first on Tamil Daily Singapore.

