கோலாலம்பூர் 5:
ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மீது அக்கறையற்றதாக சித்தரிப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அவர் பேசியபோது, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியில் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர், ஆனால் நாடாளுமன்றத்தில் இந்திய சமூக பிரச்சினைகள் குறித்து ஒருபோதும் விவாதிக்கவில்லை என சாடினார்.
“SJK(T) லடாங் ஜெரோம் பள்ளி பிரச்சினையைப் பொறுத்தவரை, இதுவரை எந்த எதிர்க்கட்சியும் அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. ஆனால், வெளியே போய் இந்த அரசாங்கம் இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறுகிறார்கள்,” என்று ராயர் தெரிவித்தார்.
“முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் தெளிவான உறுதிமொழி அளித்தார். எஸ்டேட் தொழிலாளர்களும் அங்குள்ள மாணவர்களும் விரைவில் புதிய பள்ளிக் கட்டடத்தின் பலனை அனுபவிப்பார்கள் என்றும், இது மடானி அரசாங்கம் வாக்குறுதி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அதை நிறைவேற்றும் அரசாங்கம் என்பதற்கான சான்றாகும்.” என்றார் அவர்.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது என்ற பிம்பத்தை உருவாக்க முயல்வது “அரசியல் நாடகம்” மட்டுமே என்று கடுமையாக சாடினார்.
The post “இந்தியர்களைப் புறக்கணிப்பதாக அரசாங்கத்தை சித்தரிப்பதை நிறுத்துங்கள்” – R.S.N.ராயர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

