சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு ஆப்ஷன்களில் எப்பொழுதும் ஃபிக்சட் டெபாசிட்டுக்கு (FD) தனி இடம் உண்டு. இந்த திட்டம் மூலமாக வரக்கூடிய ரிட்டன்கள் உறுதியளிக்கப்பட்டவை என்பதால் பல முதலீட்டாளர்கள் இதனை தேர்வு செய்கின்றனர்.
பல்வேறு வங்கிகளில் பல்வேறு விதமான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களும் அதற்கான வட்டிகளும் வழங்கப்பட்டு வரும்பொழுது இந்தியன் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீதம் வரையிலான வட்டியை அளித்து, மேலும் குறைவான லாக்-இன் பீரியடையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் அடுத்த 3 நாட்களுக்குள் அந்த முடிவை எடுத்து செயல்படுத்த வேண்டும்.
IND SUPER 400 DAYS: அம்சங்கள்
இந்தியன் வங்கி வழங்கும் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் பெயர் name of ‘IND SUPER 400 DAYS’. நிர்ணயிக்கப்பட்டுள்ள மெச்சூரிட்டி தேதிக்கு முன்பாகவே நீங்கள் டெபாசிட் செய்த மொத்த தொகையின் ஒரு பகுதியை வித்டிரா செய்து கொள்ளலாம் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக அமைகிறது.
IND SUPER 400 DAYS: குறைந்தபட்ச தொகை
இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கும் நபர்கள் குறைந்தபட்சமாக 10,000 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும்.
IND SUPER 400 DAYS: அதிகபட்ச தொகை
இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச லிமிட் இதற்கு முன்பு 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தொகை 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
IND SUPER 400 DAYS: டெபாசிட் கால அளவு
இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான லாக்-இன் பீரியட் என்பது பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது போல 400 நாட்கள்.
IND SUPER 400 DAYS: வட்டி விகிதம்
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போது 7.25 சதவீதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீத வட்டியையும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8 சதவீத வட்டியையும் இந்தியன் வங்கி வழங்குகிறது.
IND SUPER 400 DAYS: டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி
IND SUPER 400 DAYS திட்டத்தில் உங்களுடைய பணத்தை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2024.
IND SUPER 300 DAYS
இந்த ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தவிர இந்தியன் வங்கியில் 300 நாட்கள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டமும் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களுக்கு உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். இந்தியன் வங்கி IND SUPREME 300 DAYS என்ற பெயரில் நடத்தி வரும் இந்த சிறப்பு டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.80 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட டெபாசிட் தொகையை மெச்சூரிட்டி தேதிக்கு முன்பே உங்களால் வித்டிரா செய்ய முடியும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
