Last Updated:
PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு டிசம்பர் 31, 2025 வரை கடைசி தேதி வழங்கப்பட்டது. இது அக்டோபர் 1, 2024-க்கு முன்பு வரை PAN கார்டு பெற்றவர்களுக்குப் பொருந்தும்.
PAN கார்டை ஆதார் நம்பருடன் இணைப்பதற்கு டிசம்பர் 31, 2025 வரை கடைசி தேதி வழங்கப்பட்டுள்ளது. இதனை செய்யத் தவறும்பட்சத்தில் குறிப்பிட்ட அந்த PAN கார்டு செயலற்றதாக கருதப்படும். மேலும், PAN கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு நீங்கள் அபராதத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். இது குறித்த விரிவான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய ஆதார் நம்பருடன் உங்களது பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர் அதாவது PAN கார்டை இன்னும் இணைக்கவில்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. ஜனவரி 1, 2026 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத PAN கார்டுகள் செயலிழக்கப்படும். அதாவது இனி உங்களால் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்யவோ அல்லது வரி ரீஃபண்டுகளையும் பெற முடியாது.
PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு டிசம்பர் 31, 2025 வரை கடைசி தேதி வழங்கப்பட்டது. இது அக்டோபர் 1, 2024-க்கு முன்பு வரை PAN கார்டு பெற்றவர்களுக்குப் பொருந்தும். ஒருவேளை இந்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டுவிட்டால் உங்களுடைய PAN சேவைகள் நிறுத்தப்படும்.
ஒருவேளை உங்களுடைய PAN நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க தவறினால், உங்களுடைய PAN கார்டு செயலிழக்கப்படும். இதனால் வருமான வரித்தாக்கல் செய்வது, TDS ரீஃபண்டுகளைப் பெறுவது, வங்கி கணக்குகளை திறப்பது அல்லது பங்கு சந்தைகளில் டிரேடு செய்வது போன்ற PAN கார்டு அவசியமாக தேவைப்படும் செயல்முறைகள் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பணப் பரிமாற்றங்களின்போது ஒரு சில தாமதங்கள் அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம்.
ஆதார் என்ரோல்மென்ட் ID-ஐ பயன்படுத்தி அக்டோபர் 1, 2024 முன்பு PAN கார்டு பெற்றவர்கள் அதனை தங்களுடைய ஆதார் எண்ணுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025.
ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் PAN கார்டை எப்படி இணைக்கலாம்?
- முதலில் அதிகாரப்பூர்வ வருமான வரி இ-ஃபைலிங் வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
- ’லிங்க் ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய PAN, ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரை என்டர் செய்யுங்கள்.
- உங்களுடைய மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ என்டர் செய்து விவரங்களை சரிபார்க்கவும்.
- ஏற்கனவே உங்களுடைய PAN கார்டு செயலற்று இருந்தால், முதலில் அதற்கு நீங்கள் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- இணைப்பு செயல்முறை நிறைவு பெற்றுவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள வெப்சைட்டில் உள்ள ‘குயிக் லிங்க்ஸ்’> ‘லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்’ என்ற ஆப்ஷனைப் பாருங்கள்.
November 07, 2025 7:28 PM IST


