இது AI காலம்.. போனா வராது, பொழுது போனா கிடைக்காது.. பணத்தை கொட்டி நிறுவனத்தை வாங்கும் மார்வெல்..!
ஏஐ தொழில்நுட்பம் துறையில் பல ஏற்ற இறக்கம், லாபம் நஷ்டம், வேலைவாய்ப்பு லேஆஃப் என எது எப்படி இருந்தாலும், இது தான் எதிர்காலம் என முடிவான நிலையில் அனைத்து நிறுவனமும் விரைவில் தனது துறையில் ஆதிக்கத்தை அடைய வேண்டும் அல்லது போட்டி நிறுவனத்தைக் காட்டிலும் அதிக திறனைப் பெற்று இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கும், முக்கிய நிறுவனங்களில் பெரும் பங்கு முதலீடு செய்வதற்கும் பெரும் தொகையை நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது.

இதன் அடிப்படையில் அமெரிக்க செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் டெக்னாலஜி ஏஐ இன்பரா சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், போட்டி நிறுவனமான பிராட்காம் உடன் போட்டிப்போடும் விதமாக ஆப்டிக்கல் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் லூமென்டம் என்னும் நிறுவனத்தை 115 பில்லியன் டாலர் தொகை கொடுத்து மொத்தமாக அந்நிறுவனத்தின் கடன்களையும் சேர்த்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் மிகப்பெரிய M&A ஆக விளங்குகிறது மார்வெல் டெக்னாலஜிஸ் மற்றும் லுமென்டம் டீல்.
ஏற்கனவே ஏஐ துறையில் அதிகளவிலான தொகையைக் கொட்டப்பட்டும் வேளையில் தற்போது சிறு நிறுவனங்களைக் கைப்பற்றும் போட்டி துவங்கியுள்ளது.
உலகம் முழுவதும் அனைத்து நிறுவனங்களும் ஏஐ டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்திருக்கும் வேளையில் டேட்டாவை அதிவேகமாகக் கடத்திக் கொண்டு செல்ல ஆப்டிகல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமாக இருக்கிறது.
எதிர்காலத்திலும் இத்தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் இத்துறையில் சிறந்து விளங்கும் லுமென்டம் நிறுவனத்தை மார்வெல் டெக்னாலஜிஸ் வாங்கியுள்ளது.
மேலும் லுமென்டம் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை காட்டிலும் 23.9 சதவீதம் அதிக விலை அதாவது ஒரு பங்கை 1132 டாலர் கொடுத்து அனைத்து பங்குகளையும் மார்வெல் டெக்னாலஜிஸ் வாங்குகிறது.
இந்த பங்கு விலை மூலம் லுமென்டம் சுமார் 102.34 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெற்றாலும், இந்நிறுவனம் பெற்ற கடன் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 115 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் மார்வெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தக வாய்ப்பு 550 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மார்வெல் தற்போது அமேசான் நிறுவனத்திற்கான ஏஐ கஸ்டம் சிப் தயாரிப்ரிஸ் முக்கி பங்கு வகிக்கிறது, அதேபோல் டேட்டா சென்டர் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாக உள்ளது.
