இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திருக்கோயில்களில் தூப தூப ஆராதனை எங்கெங்கும் மணியோசை எங்கெங்கும் தேவாரம் திருவோசை, மகிழ்ச்சியோடு இறையன்பர்கள் இருக்கின்றார்கள். இது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு பல்வேறு வகையில் வியூகங்கள் திரைமறைவிலும், வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியிலே ஆளுகின்ற ஒன்றிய அரசிற்கு பி டீம்களாக பல்வேறு முனையில் இருந்து பல்வேறு அரசியல் கணக்குகளை குருட்டுமதியோடு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.