Last Updated:
கடந்த 2019-ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், “இது என்ன வகையான நீதி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 16 வயதான சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஜக எம்.எல்.ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்காரை கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்து செங்கார் நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமினும் அளித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்மணியை, காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணியை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அழைத்து ஆறுதல் கூறினர். அப்போது பெண்மணியின் துயரத்தைக் கேட்டு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கண்ணீர் சிந்தினர்.
அதைத்தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் இதுபோன்று நடத்தப்படுவது நியாயமானதா என்று வினவியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


