• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இது எனக்கே ஆச்சரியமாத் தான் இருக்கு: ஜோதிகா

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
இது எனக்கே ஆச்சரியமாத் தான் இருக்கு: ஜோதிகா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா இந்தி படம் மூலம் நடிகையானவர் ஜோதிகா. அதன் பிறகு அவர் கோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து சைத்தான் படம் மூலம் மீண்டும் பாலிவுட் சென்றார். அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த சைத்தான் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சைத்தானை அடுத்து ஜோதிகா நடிப்பில் வெளியான ஸ்ரீகாந்த் படமும் ஹிட்டாகிவிட்டது. ஸ்ரீகாந்த் படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்திருந்தார்.

பாலிவுட்டுக்கு மீண்டும் சென்றிருப்பது பற்றி ஜோதிகா கூறியிருப்பதாவது, இந்த கம்பேக் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. 25 ஆண்டுகளாக சத்தமே இல்லை. இந்நிலையில் திடீரென்று இரண்டு படங்கள் வெளியாகி அனைவரையும் பேச வைத்துவிட்டது. வடக்கு, தெற்கு என்கிற பிரிவு எல்லாம் தற்போது இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் ரசிகர்கள் என்றார்.

நான் தென்னிந்திய படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் போன்று பாலிவுட்டில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன். சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய படங்களின் கதைகள் மிகவும் அழகானவை. அதனால் தான் அந்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் தற்போது என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என ஜோதிகா மேலும் தெரிவித்துள்ளார்.

சைத்தான் பட செட்டில் எனக்கும், மாதவனுக்கும் ரொம்ப மரியாதை கொடுத்தார்கள். எங்களை தனக்கு சரிசமமாக நடத்தினார் அஜய் தேவ்கன். தென்னிந்தியாவில் இருந்து வந்திருக்கும் பெரிய நடிகர்கள் என்று படக்குழு எங்களை அங்கீகரித்தது என பெருமையாக கூறியிருக்கிறார் ஜோதிகா. தன் இரண்டு இந்தி படங்களும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஜோதிகா அடுத்ததாக டப்பா கார்டல் வெப்தொடரில் நடித்திருக்கிறார். அதில் சபானா அஸ்மி, ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த், கஜ்ராஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஹிதேஷ் பாட்டியா இயக்கியிருக்கும் டப்பா கார்டல் வெப்தொடரை பாலிவுட் நடிகரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தரும், ரித்தேஷ் சித்வானியும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் மகன் தேவ், மகள் தியாவுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. ஆனால் இது நிரந்தரம் அல்ல. பாலிவுட் கமிட்மென்ட் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பி வந்துவிடுவேன் என்றார். சூர்யாவோ சென்னையில் தங்கி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி மும்பைக்கு சென்று மனைவி, பிள்ளைகளை பார்த்து வருகிறார்.

The post இது எனக்கே ஆச்சரியமாத் தான் இருக்கு: ஜோதிகா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு இத்தாலிய பிரதமர் மெலோனி வாழ்த்து | Italian Prime Minister Giorgia Meloni congratulates PM Modi after NDA’s win

Next Post

ஜூலை மாதம் திருமணம்!!ரைடரைத் துரத்தி சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

Next Post
ஜூலை மாதம் திருமணம்!!ரைடரைத் துரத்தி சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

ஜூலை மாதம் திருமணம்!!ரைடரைத் துரத்தி சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin