அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றம் ஏதும் செய்யாமல் 5.25 சதவிகிதம் 5.50 சதவிகிதம் மதிப்பீடுகளே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்க பங்குச் சந்தை நாஸ்டாக் 2.64 சதவீதம் உயர்ந்தது. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.
இதனால், வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 82,014 என்ற புதிய உச்ச நிலையை எட்டியது.
பின்னர் சற்று வர்த்தகம் குறைந்ததால் 10:20 மணிக்கு 81,972 புள்ளிகளாக வர்த்தகமாகின. இது நேற்றைய நிலவரத்தை விட 227.4 புள்ளிகள் அதிகம்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தகம் துவங்கியதும் 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்துடனேயே வர்த்தகமாகியது. காலை 10:20 மணி நிலவரப்படி, 97.7 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 44 ஆக வர்த்தகமானது.
இதையும் படிங்க: உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டது.

.