பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 8 தமிழர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள மொத்தம் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தற்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகிறார். அவரே அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்கட்சி சார்பில் கீர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கிலாந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேரும் களம் கண்டுள்ளனர்.
குறிப்பாக, உமா குமரன், மயூரன் செந்தில்நாதன், கவின் ஹரன், கமலா குகன், நரணி ருத்ரா ராஜன், கிருஷ்ணி, டெவின் பால், ஜாஹீர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க:
தொடங்கியது பிரிட்டன் பிரதமர் தேர்தல்… ஜெயிப்பாரா ரிஷி சுனக்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?!
இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
