Last Updated:
இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், ரோகித் சர்மா 104 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முன்னேறின.
ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணியும், தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறின.
இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியை சந்திக்காத நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டம் சற்று கவலையளிப்பதாகவே இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், ரோகித் சர்மா 104 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிரடியாக தொடங்க வேண்டும் என்று அவர் நினைத்தாலும், அவரின் விக்கெட் விரைவில் வீழ்வதால் அவர் மீது விமர்சனம் எழுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய அணி வீரரான சுனில் கவாஸ்கர், “அவர் (ரோகித் சர்மா) 25 ஓவர்கள் விளையாடினாலே, இந்திய அணியால் 180 முதல் 200 ரன்கள் வரை எட்டமுடியும். அப்போது இரண்டு விக்கெட் மட்டும் வீழ்ந்து இருந்தால், என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்திய அணியால் சுலபமாக 350 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்ன?
அவர் விளையாடும் முறை குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதில் விவேகம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். 25 – 30 ரன்கள் எடுப்பதற்கு அவர் சந்தோஷப்படக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா இதுவரை வங்கதேசத்திற்கு எதிராக 41 ரன்களை விளாசியுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 20 ரன்களும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 ரன்களும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 28 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
March 07, 2025 1:30 PM IST


