Last Updated:
130-க்கும் மேற்பட்ட எரிமலைகளின் பாறைப் பகுதிகள் இதற்கு ஆய்வு செய்யப்பட்டன
மனித உடலில் இதயம் எப்படி துடிக்கிறதோ, அதே போன்று பூமியின் நிலப்பரப்பில் சில பகுதிகள் துடிப்பதாகவும், இது புதிய கடலை உருவாக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமியின் எதிர்காலத்தின் நலன் கருதி ஏராளமான ஆய்வுகளை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சூரிய குடும்பத்திலும், பால்வெளி அண்டத்திலும் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய ஏற்ற சூழல் காணப்படுகிறது. மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன
அதேநேரம், பூமியில் உள்ள வளங்கள், பூமியின் தன்மை எதிர்காலத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. இதற்காக, அந்த பல்கலைக்கழகத்தின் பூமி அறிவியல் பேராசிரியர் டாம் கர்னல் தலைமையில் குழுவினர் ஆய்வினை மேற்கொண்டார்கள். 130-க்கும் மேற்பட்ட எரிமலைகளின் பாறைப் பகுதிகள் இதற்கு ஆய்வு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை நேற்று நேச்சர் ஜியோசயின்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், மனிதனின் இதயத் துடிப்பைப் போன்று பூமியின் சில பகுதிகளில் துடிப்புகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக புதிய கடற்பகுதி உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வு உடனடியாக நடந்துவிடாது. இருப்பினும், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இதே நிலைமை நீடிக்கும் போது புதிய கண்டப் பகுதியும், புதிய கடற்பகுதியும் பூமியில் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக பூமியின் மற்றப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தற்போதைக்குக் கூற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 26, 2025 12:50 PM IST
இதயம் போல் துடிக்கும் நிலப்பரப்பு.. பூமியில் புதிய கடல் உருவாகும் – ஆய்வாளர்கள் ஷாக் தகவல்


