• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல்  | Sudarshan Reddy announced as India Alliance Vice Presidential candidate

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல்  | Sudarshan Reddy announced as India Alliance Vice Presidential candidate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணி தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

திமுக தரப்பில் திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. அதேபோல, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், திட்ட கமிஷன் முன்னாள் தலைவர் பால்சந்திர முங்கேசர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும், அவர் அரசியல் கட்சிகளை சாராதவராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன. இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகும். அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் இருக்கும்போது, அதைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில் நாட்டுக்கு நல்ல பணிகளை செய்யக்கூடிய வேட்பாளர் தேவை என்று முடிவு செய்தோம்.

இதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் அவரும் ஒருவர். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் திறம்படப் பணியாற்றி உள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்த போர். இதன் காரணமாகவே நீதிபதி சுதர்சன் ரெட்டியை பொது வேட்பாளராக அறிவித்துள்ளோம். வரும் 21-ம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்வார். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளேன். எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆளும் என்டிஏ கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்” என்றார். தெலங்கானாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது, ஆந்திரா, தெலங்கானாவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், ஜன சேனாவிடம் அவர் ஆதரவு கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளன. மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பிஆர்எஸ் கட்சியின் ஆதரவையும் அவர் கோரியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஆகுலமல்லாவரத்தில் 1946-ல் பிறந்த சுதர்சன் ரெட்டி, 1971-ல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தார்.1995-ல் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 2005-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 2013-ல் கோவா மாநில லோக்யுக்தாவில் பணியாற்றினார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 7 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஆக. 21) நிறைவடைய உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (ஆக. 20) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: என்டிஏ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், எம்.பி.க்கள் உடனிருப்பர்.தேர்தலுக்காக இன்று டெல்லி வந்த சி.பி.ராதாகிருஷ்ணனை, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சியின் மக்களவைத் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை, பிரதமர் மோடி அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தேர்தலில் கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

அமெரிக்காவில் இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்; வைரலான வீடியோ | Makkal Osai

Next Post
அமெரிக்காவில் இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்; வைரலான வீடியோ | Makkal Osai

அமெரிக்காவில் இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்; வைரலான வீடியோ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin