உலகெங்கும் இணைய சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பல சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் முக்கிய வங்கிகள்,ஊடகங்கள், விமான நிறுவனங்களின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இணையச் சேவை தடங்கலால் சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திலும் இணையச் சேவை கோளாறால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

