• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலையை ஆரம்பித்து வைத்த டக்ளஸ்

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலையை ஆரம்பித்து வைத்த டக்ளஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


53

நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், இன்று (20) சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் பலர்கலந்து கொண்டிருந்தனர்

யாழ்ப்பாணம், தென்மராட்சி வலயத்தில் மிகவும் பழைமைவாய்ந்த 150 ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் தரம் 1 முதல் A/L வரையிலான வகுப்புக்கள் இருந்து வந்தது.

ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து குறித்த பகுதி கல்வி சமூகத்தினரும், நலன்விரும்பிகளும், பெற்றோரும் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக பாடசாலைக்கு அமைச்சர் நேரில் சென்று, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்விப்புலத்தினரின் கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இந்நிலையில் குறித்த பிரச்சனை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று மீளவும் குறித்த ஆரம்ப பிரிவு வகுப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்



Read More

Previous Post

பூமி வணிகங்களுக்கான புதிய திட்டங்கள் சர்ச்சைக்குரியவை ஆனால் தேவை – Malaysiakini

Next Post

covaxin | கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுமா?

Next Post
covaxin | கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுமா?

covaxin | கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin