Last Updated:
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட அடூர்மலை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட அடூர்மலை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் பருவமழை சில நாட்களாக பலமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு அபாயம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட அடூர்மலை பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாவட்ட அவசரக்காலச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறை கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 34 பேர் கொண்ட சிறப்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் விரைந்த NDRF குழுவினர், மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்களுடன் இணைந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது, காணாமல் போனவர்களைத் தேடுவது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்ட தகவலில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தின் 34 பேர் கொண்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடூர்மலை பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டிருக்கிறார்.


